முக்கிய செய்திகள்
Monday, February 1, 2016
தேசிய மட்ட பரா ஒலிம்பிக் போட்டியில் இராணுவ மற்றுத்திறனாளிகள் ஆணிகளுடன் மோதி வெற்றிபெற்ற முன்னாள் போராளிகள்
எங்களது வாழ்க்கையை தமிழ் சமூகத்திற்காக அர்ப்பணித்து வாழ்க்கையில் எதுவுமற்றவர்களாக இருந்த எங்களுக்கு மீண்டும் வெற்றிபெறுவதற்கான ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.
எனவே, அதற்காக புலம்பெயர் சமூகம் உதவவேண்டுமென தேசிய மட்ட பரா ஒலிம்பிக் போட்டிகளில் இராணுவ மற்றுத்திறனாளிகள் ஆணிகளுடன் மோதி வெற்றிபெற்ற முன்னாள் போராளிகள் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.
தேசிய மட்டத்தில் நடைபெற்ற பரா ஒலிம்பிக் போட்டிகளில் மட்டக்களப்பு மாவட்டம் சார்பாக கலந்துகொண்டு 23 பதக்கங்களைப் பெற்று சாதனைபடைத்த 46 பேரைக் கொண்ட மாற்றுத்திறனாளிகள் அணியில் கலந்துகொண்ட 26 முன்னாள் போராளிகள் தங்களது வாழ்வாதார கஸ்டங்களுக்கு மத்தியிலும் பயிற்சிகள் எதுவுமின்றி பதக்கங்களை வென்றுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டம் சார்பாக கலந்துகொண்ட மாற்றுத்திறனாளிகள் 04 தங்கப்பதக்கங்களையும் 07 வெள்ளிப்பதக்கங்களையம் 11 வெண்கலப்பதக்கங்களையும் பெற்று மொத்தமாக 23 பதக்கங்களை வெற்றியீட்டியுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டம் சார்பாக பரா ஒலிம்பிக் போட்டிகளில் முதல் முதலாக களமிறங்கிய மற்றத்திறனாளிகள் அணி 23 பதக்கங்களை பெற்று சாதனைபடைப்பதற்கு அதில் கலந்துகொண்ட 26 முன்னாள் போராளிகள் பெறும்பங்காற்றியுள்ளனர்.
இந்த நிலையில், குறித்த அணியில் பங்குபற்றி பதக்கங்களை வெற்றிபெற்றுள்ள முன்னாள் பெண் போராளிகள் மூவர் சர்வதேச போட்டிகளில் பங்குபெற்றுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மிக முக்கியமாக தேசியமட்டத்தில் வெற்றிபெற்ற முன்னாள் பெண் போராளிகள் மூவருக்கும் சர்வதேச ரீதியான பயிற்சிகளையும், உடல் தகமைகளையும் வழங்கினால் இவர்கள் சர்வதேச ரீதியாக இடம்பெறும் பரா ஒலிம்பிக்போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற வாய்ப்புள்ளதாக இவர்களின் பயிற்றுவிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தங்களது நாளாந்த வாழ்வாதாரத்திற்காக போராடிக் கொண்டிருக்கும் இந்த முன்னால் பெண்போராளிகள் தங்களது தன்னம்பிக்கைளை கைவிடாது டியகம மகிந்தராஜபக்ச மைதானத்தில் கடந்த ஜனவரி மாதம் 24ஆம் மன்றும் 26ஆம் திகதிகளில் நடைபெற்ற போட்டிகளில் கலந்துகொண்டு சாதித்தமையானது அவர்களின் வாழ்வாதாரத்திற்கான மறுமலர்ச்சிக் காலத்திற்கான பயணமாகவே அமைந்துள்ளது.
தேசிய ரீதியாக வெற்றிபெற்ற இவர்கள் மீண்டும் மற்றுமொரு சர்வதேச வெற்றிக்காக தங்களை தயார்படுத்துவதற்காகவும், தங்களது குடும்பச்சுமைகளை குறைத்து பரா ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றிபெறுவதற்கான பயிற்சிகளை பெறுவதற்கும் பயிற்சிக்கான உபகரணங்களை வாங்குவதற்கும் தங்களுக்கான உதவிகளை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Saturday, January 30, 2016
யுத்தம் தொடர்பான சட்டதிட்டங்களை கடைப்பிடிக்கவில்லை! ஜனாதிபதி குற்றச்சாட்டு
யுத்தத்தின் போது கடைப்பிடிக்கப்பட வேண்டிய சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக விடுதலைப் புலிகள் ஒருபோதும் செயற்படவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அல்ஜஸீரா தொலைக்காட்சிக்கு இன்று வழங்கியுள்ள விசேட செவ்வியிலே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை இராணுவம் சர்வதேச சட்டங்கள் மற்றும் இலங்கையின் சட்டங்களுக்கு அமைவாகவே செயற்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன் போது தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இலங்கை இராணுவம் இந்த நியமங்களை மதித்து அனைத்து சந்தர்ப்பங்களிலும் நேர்மையாக செயற்பட்டுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், இராணுவத்தினரைச் சேர்ந்த எவரேனும் ஒருவர் இந்த நடவடிக்கைகளை மீறி தவறிழைக்கப்பட்டிருந்தால், அது தொடர்பில் விசாரணைப் பொறிமுறைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, தவறிழைத்தமை கண்டறியப்படுமாயின், அதனுடன் தொடர்புடையவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தாம் இதற்கு முன்னரும் தெளிவாக கூறியிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.

இனப்பிரச்சினைக்கான தீர்வு சர்வதேச சமூகத்தால் மட்டுமே சாத்தியமாகும்.
அரசாங்கத்தை நம்பி சர்வதேசத்தை கை விட்டால், 2016ம் ஆண்டில் அல்ல இந்த யுகத்திலும் தமிழருக்குத் தீர்வு கிடையாது. என்பதே உண்மை.
அரசனை நம்பி புருசனைக் கைவிடல் என்றொரு பழமொழி நம் தமிழ்மொழியில் உண்டு. அரசன் என்ற சொற்பதம் திரிபடைந்ததால் ஏற்பட்டதாகும். உண்மையில் அரசனை என்பது அரசை என்பதாக இடம்பெற்றிருக்க வேண்டும்.
முன்னைய காலத்தில் பிள்ளை இல்லாத பெண்கள், அரச மரத்தைப் பலமுறை சுற்றி வந்து வழிபாடு செய்தால் பிள்ளை வரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவ்வாறானதொரு நடைமுறையைப் பின்பற்றி வந்தனர்.
அரச மரத்தைச் சுற்றி வந்தால் பிள்ளைவரம் கிடைக்கும் என்று நம்பி புருசனைக் கைவிட்டு விடாதீர்கள். அரச மரத்தை சுற்றுவதோடு புருசனையும் கை விடாமல் இருக்க வேண்டும் என்பது அந்தப் பழமொழியின் தத்துவம்.
ஆக, அரச மரத்தை மட்டும் நம்பி, கட்டிய புருசனைக் கைவிட்டால் எல்லாம் அம்போதான் என்பதை விளக்குவதற்காக இப்பழமொழி நம் தமிழ் மொழியில் இடம்பெற்றுள்ளது.
இது ஒருபுறம் இருக்க, எங்கள் இனப்பிரச்சினை தொடர்பிலும் மேற்குறிப்பிட்ட பழமொழியை நாம் ஒப்பிட்டு நோக்குதல் பொருத்துடையதாகும்.
அதாவது எங்களின் பிரச்சினைக்கான தீர்வை இலங்கை அரசாங்கம் தானாக முன்வந்து ஒரு போதும் தந்துவிடப்போவதில்லை என்பது நிறுத் திட்டமான உண்மை.
அப்படியானதொரு சூழ்நிலைக்கு சிங்கள அரசியல் தலைவர்களும் சிங்கள மக்களும் இன்னும் தயாராகவில்லை.
எனவே இனப்பிரச்சினைக்கான தீர்வு ஒன்று எட்டப்பட வேண்டுமாக இருந்தால் சர்வதேச சமூகத்தால் மட்டுமே அது சாத்தியமாகும்.
அதாவது சர்வதேச சமூகம் இலங்கை அரசு மீது செலுத்துகின்ற அழுத்தமே தமிழ் மக்களுக்கான உரிமையைப் பெற்றுத் தரக்கூடியது.
எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் தலைவர் இரா.சம்பந்தனும் இலங்கை அரசுடன் நெருங்கி, ஒற்றுமைப்பட்டு, இணங்கிப் போவதன் மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வை எட்ட முடியும் என நம்பியுள்ளனர்.
இந்த நம்பிக்கை, பிள்ளைவரம் கிடைக்கும் என்று நம்பி அரச மரத்தைச் சுற்றி வருவதற்கு ஒப்பானதாகும்.
இங்கு அரசாங்கத்தை நம்புவது தவறு என்று கூறுவது நம் நோக்கமல்ல. அரசாங்கத்தை நம்புவதென்பது அரசின் செயற்பாட்டில் இருந்து ஏற்பட வேண்டும் என்பதே நம் தாழ்மையான கருத்து.

Friday, January 29, 2016
இலை மலர்ந்தது... ஆனால் ஈழம் மலர வில்லை... குமரியில் ஒலித்த ஈழத் தமிழர் குரல்!
நாகர்கோவில்: விடுதலைப்புலி ஆதரவாளர் என குற்றம்சாட்டப்பட்ட ஈழத் தமிழர் மகேந்திரன் குழித்துறை நீதிமன்றத்தில் இன்று காலை ஆஜர்படுத்தபட்டார். பலத்த பாதுகாப்போடு அவரை திருச்சி காவல்துறையினர் அவரை அழைத்து வந்தனர்.

நீதிமன்ற வளாகத்தில் வந்தபோது திடீரென மகேந்திரன், பொய் வழக்கு போட்டு கைது செய்திருக்கிறார்கள், அகதிகள் முகாமில் அடிப்படை வசதிகள் இல்லை, நிவாரண வசதிகள் எதும் இல்லை, பெண்கள் கருமுட்டை விற்று வாழும் சூழலே அகதிகள் முகாமில் உள்ளது என கோஷமிட்டவரே வந்தார்.
குழித்துறை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1ல் ஆஜரான மகேந்திரன் வழக்கு பிப்ரவரி 9ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. நீதிமன்றத்திற்கு வெளியே வரும் போதும் அதே கோஷத்தோடே வெளியே வந்தார். அவரை வேகமாக காவல்துறையினர் வேனில் ஏற்றி செல்லும் போதும், பொய் வழக்கு போட்டுள்ளனர். ஈழ தமிழர்களுக்கு பாதுகாப்பில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

இது குறித்து மகேந்திரன் தரப்பில் பேசியபோது, "கடந்த 27.7.2014 அன்று குமரி மாவட்டம் களியக்காவிளை அகதிகள் முகாமில் இருந்து 13 பேர் ஆஸ்திரேலியாவுக்கு தப்பி செல்ல முயன்றனர். அவர்கள் நடுக்கடலில் கைது செய்யப்பட்டனர். அதன் பின் ஏஜென்ட் மூலமாக பெயின்ட் வேலைக்கு கும்மிடிபூண்டி முகாமில் இருந்து திசையன்விளைக்கு அழைத்து வரப்பட்ட மகேந்திரன் வெளிநாட்டுக்கு தப்பி செல்ல முயன்றதாக 6.8.2014 அன்று கைது செய்யப்பட்டார். மொத்தம் 14 பேரில் 10 பேருக்கு 2014ல் பெயில் கொடுக்கப்பட்டது. மகேந்திரன், சுபாஷ், இராஜேந்திரன், யுகபிரியன் ஆகியோருக்கு விடுதலைப்புலிகளோடு தொடர்பு இருப்பதாக பெயில் மறுக்கப்பட்டது. ஆனால் மகேந்திரன், அகதிகள் மேல் பொய் வழக்கு போடுவதையும், அவர்களின் கோரிக்கைகளை முன்னிறுத்தியும், குரல் கொடுத்ததால் பெயில் கொடுக்காமல் இழுத்தடிக்கின்றனர்.
மழை வெள்ளம் பாதித்த கடலூர் மாவட்டம், கீழ்கூத்துமுகாம், காட்டுமன்னார்குடி, குறிஞ்சிபாடி, குள்ளம் சாவடி, விருத்தாசலம் போன்ற அகதிகள் முகாமிலும், சென்னை புழல், கும்மிடிபூண்டி அகதிகள் முகாமில் எவ்வித நிவாரணங்களோ, அரசு உதவிகளோ, இலவச பொருட்களோ எதும் கொடுக்கப்படவில்லை. உளவு பிரிவு காவல்துறையினர் தவறான தகவலை அரசுக்கு கொடுத்து எங்கள் வாழ்வாதாரங்களை பாதிப்படைய செய்கின்றனர். கழிப்பிட வசதியை கூட செய்து தர அரசு முன்வரவில்லை.
பெண்கள் கருமுட்டை விற்று வாழ்க்கை நடத்தும் அவல நிலை, குறைந்த சம்பளத்தில் வேலை, விதவை பென்சன் கிடைப்பதில்லை, தமிழகத்தில் மட்டும் அகதிகள் மேல் அதிக வழக்கு போடுவதை கண்டித்து திருச்சி ஈழத்தமிழர் சிறப்பு முகாமில் மகேந்திரன் 23.12.2015 அன்று தொடர்ந்து நான்கு நாள் உண்ணாவிரதம் இருந்தார். உடனே தனித்துறை ஆட்சியர் உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுகிறோம் என கூறினார். ஆனால் நிறைவேற்ற வில்லை.
எனவே கடந்த 26ம் தேதி குடியரசு தினத்தில் மீண்டும் தொடர் உண்ணாவிரதம் இருக்கிறார். 28ம் தேதி ராமநாதபுரம் திருவளுனை நீதிமன்றத்திலும், இன்று குழித்துறை நீதிமன்றத்திலும் ஆஜராகிறார். இந்த வழக்கு 7 நீதிமன்றத்தில் நடக்கிறது. இலை மலர்ந்தால், ஈழம் மலரும் என்று வாக்குறுதி. இலை மலர்ந்தது, ஆனால் ஈழம் மலர வில்லை" என்றனர்.
நன்றி : விகடன்
Subscribe to:
Posts
(
Atom
)