Monday, February 1, 2016
தேசிய மட்ட பரா ஒலிம்பிக் போட்டியில் இராணுவ மற்றுத்திறனாளிகள் ஆணிகளுடன் மோதி வெற்றிபெற்ற முன்னாள் போராளிகள்
எங்களது வாழ்க்கையை தமிழ் சமூகத்திற்காக அர்ப்பணித்து வாழ்க்கையில் எதுவுமற்றவர்களாக இருந்த எங்களுக்கு மீண்டும் வெற்றிபெறுவதற்கான ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.
எனவே, அதற்காக புலம்பெயர் சமூகம் உதவவேண்டுமென தேசிய மட்ட பரா ஒலிம்பிக் போட்டிகளில் இராணுவ மற்றுத்திறனாளிகள் ஆணிகளுடன் மோதி வெற்றிபெற்ற முன்னாள் போராளிகள் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.
தேசிய மட்டத்தில் நடைபெற்ற பரா ஒலிம்பிக் போட்டிகளில் மட்டக்களப்பு மாவட்டம் சார்பாக கலந்துகொண்டு 23 பதக்கங்களைப் பெற்று சாதனைபடைத்த 46 பேரைக் கொண்ட மாற்றுத்திறனாளிகள் அணியில் கலந்துகொண்ட 26 முன்னாள் போராளிகள் தங்களது வாழ்வாதார கஸ்டங்களுக்கு மத்தியிலும் பயிற்சிகள் எதுவுமின்றி பதக்கங்களை வென்றுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டம் சார்பாக கலந்துகொண்ட மாற்றுத்திறனாளிகள் 04 தங்கப்பதக்கங்களையும் 07 வெள்ளிப்பதக்கங்களையம் 11 வெண்கலப்பதக்கங்களையும் பெற்று மொத்தமாக 23 பதக்கங்களை வெற்றியீட்டியுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டம் சார்பாக பரா ஒலிம்பிக் போட்டிகளில் முதல் முதலாக களமிறங்கிய மற்றத்திறனாளிகள் அணி 23 பதக்கங்களை பெற்று சாதனைபடைப்பதற்கு அதில் கலந்துகொண்ட 26 முன்னாள் போராளிகள் பெறும்பங்காற்றியுள்ளனர்.
இந்த நிலையில், குறித்த அணியில் பங்குபற்றி பதக்கங்களை வெற்றிபெற்றுள்ள முன்னாள் பெண் போராளிகள் மூவர் சர்வதேச போட்டிகளில் பங்குபெற்றுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மிக முக்கியமாக தேசியமட்டத்தில் வெற்றிபெற்ற முன்னாள் பெண் போராளிகள் மூவருக்கும் சர்வதேச ரீதியான பயிற்சிகளையும், உடல் தகமைகளையும் வழங்கினால் இவர்கள் சர்வதேச ரீதியாக இடம்பெறும் பரா ஒலிம்பிக்போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற வாய்ப்புள்ளதாக இவர்களின் பயிற்றுவிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தங்களது நாளாந்த வாழ்வாதாரத்திற்காக போராடிக் கொண்டிருக்கும் இந்த முன்னால் பெண்போராளிகள் தங்களது தன்னம்பிக்கைளை கைவிடாது டியகம மகிந்தராஜபக்ச மைதானத்தில் கடந்த ஜனவரி மாதம் 24ஆம் மன்றும் 26ஆம் திகதிகளில் நடைபெற்ற போட்டிகளில் கலந்துகொண்டு சாதித்தமையானது அவர்களின் வாழ்வாதாரத்திற்கான மறுமலர்ச்சிக் காலத்திற்கான பயணமாகவே அமைந்துள்ளது.
தேசிய ரீதியாக வெற்றிபெற்ற இவர்கள் மீண்டும் மற்றுமொரு சர்வதேச வெற்றிக்காக தங்களை தயார்படுத்துவதற்காகவும், தங்களது குடும்பச்சுமைகளை குறைத்து பரா ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றிபெறுவதற்கான பயிற்சிகளை பெறுவதற்கும் பயிற்சிக்கான உபகரணங்களை வாங்குவதற்கும் தங்களுக்கான உதவிகளை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
Post a Comment