TRENDING

Wednesday, January 27, 2016

ஆப்பிரிக்காவில் இருந்து சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட 359 தந்தங்கள் இலங்கையில் அழிப்பு !


இலங்கையில் சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட 359 ஆப்பிரிக்க யானைத் தந்தங்களை  அதிகாரிகள் அழித்தனர்.

இந்தத் தந்தங்களின் மதிப்பு இலங்கை மதிப்பில் ரூ.40 கோடி எனக் கூறப்படுகிறது. கென்யாவிலிருந்து துபாய்க்குக் கொண்டு செல்வதற்காக அந்தத் தந்தங்கள் 2012-ஆம் ஆண்டு இலங்கை கொண்டு வரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். காட்டு விலங்குகளைக் கொன்று, அதன் உறுப்புகளை விற்பனை செய்ய முயலும் கடத்தல் காரர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அந்தத் தந்தங்கள் அழிக்கப்பட்டதாக அவர்கள் கூறினர்.

இலங்கையில் கடத்தல் தந்தங்கள் அழிக்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

 
Back To Top