TRENDING

Wednesday, January 27, 2016

புதிய அரசியல் சட்டத்தில் இலங்கை தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க தமிழ் தேசிய கூட்டணி வற்புறுத்தல் !

புதிய அரசியல் சட்டத்தில் இலங்கை தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டணி கூறியுள்ளது.

புதிய அரசியல் சட்டம்

இலங்கை அரசியல் சட்டம், கடந்த 1978–ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அதற்குப் பதிலாக புதிய அரசியல் சட்டத்தை உருவாக்க இலங்கை அரசு விரும்புகிறது.

இதற்காக, சமீபத்தில் பாராளுமன்றத்தில் ஒரு தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீது நேற்று ஓட்டெடுப்பு நடைபெற இருந்த நிலையில், அம்முயற்சி கைவிடப்பட்டது.

புதிய அரசியல் சட்டம் வகுப்பது தொடர்பாக, அரசுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே நிலவிய கருத்து வேறுபாடே இதற்கு காரணம்.

அதிகார பகிர்வு

இந்நிலையில், முக்கிய தமிழ் கட்சியான தமிழ் தேசிய கூட்டணியின் எம்.பி. எம்.ஏ.சுதந்திரன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

இலங்கையின் வடக்கு, கிழக்கில் வாழும் தமிழர்களுக்கு சுயாட்சி தேவை. அதற்கு தமிழர்கள் அதிகார பகிர்வு கேட்கிறார்கள். இந்த தேசிய பிரச்சினைக்கு அதிகார பகிர்வு மட்டுமே தீர்வு.

புதிய அரசியல் சட்டத்தில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கப்பட வேண்டும். இலங்கையை ஒரே நாடாக முன்னெடுத்துச் செல்ல புதிய அரசியல் சட்டம் வேண்டும் என்பதை அனைவரும் உணர்ந்துள்ளனர். எனவே, அதிகார பகிர்வுக்கு புதிய அரசியல் சட்டம் தளம் அமைக்கும் என்று நம்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment

 
Back To Top