
யாழ்ப்பாணம், அச்சுவேலி பகுதியில் இன்று (23) சனிக்கிழமை அதிகாலை சிறிய அளவிலான நில அதிர்வு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அந்தப் பகுதியில் உள்ள வீடொன்றின் சுவரில் பாரிய வெடிப்பொன்று ஏற்பட்டுள்ளது.
அதிகாலை வேளையில் பாரிய சத்தத்துடன் ஏற்பட்ட நில அதிர்வினாலேயே இந்த சுவரில் வெடிப்பு ஏற்பட்டதாகவும் இது தொடர்பில் கனியவளங்கள் மற்றும் சுரங்க அகழ்வாரச்சி பணியகத்துக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
படம்: மயூரப்பிரியன்
Post a Comment