TRENDING

Friday, January 29, 2016

மிகவும் பெரிய சூரிய மண்­டலம் கண்­டு­பி­டிப்பு

இதுவரை கண்டறியப்பட்டதிலேயே மிகவும் பெரிய சூரிய மண்டலமொன்றை கண்டுபிடித்துள்ளதாக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். அந்த மண்டலத்திலுள்ள மிகவும் பெரிய கோள் தனது நட்சத்திரத்தை வலம் வருவதற்கு சுமார் ஒரு மில்லியன் வருடங்களை எடுத்துக்கொள்வதாக மதிப்பிடப்பட்டள்ளது.

வாயு வடிவான இந்தக் கோள் எமது சூரிய மண்டலத்திலிருந்து ஒரு திறில்லியன் கிலோமீற்றர்களுக்கு அப்பால் உள்ளது.
எமது சூரியனை புளூட்டோ கிரகம் வலம் வரும் தூரத்துடன் ஒப்பிடுகையில் 140 மடங்கு அதிகமான தூரத்தில் அந்தக் கோள் தனது தாய் நட்சத்திரத்தை சுற்றி வலம் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
2 மாஸ் ஜே 2126  -8140 என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்தக் கோள் வியாழக்கிரகத்தை விடவும் 12 முதல் 15 மடங்கு திணிவுடையதாகும்.
தனது தாய் நட்சத்திரத்திலிருந்து இவ்வளவு தொலைவில் இவ்வாறான கோள் ஒன்று வலம் வருவதைக் கண்டறிந்து ஆச்சரியமடைவதாக இந்த ஆய்வில் பங்கேற்ற அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கலாநிதி சிமொன் முர்பி தெரிவித்தார்.
அந்த சூரிய மண்டலமானது நமது சூரிய மண்டலம் உருவான முறையில் உருவாகியிருக்க வில்லை என அவர் கூறினார்.

2 comments :

  1. Casino Reviews - Pros, Cons, Players, & More!
    Casino Reviews. 배당흐름 This casino has been operating since 2019. The 블랙 잭 룰 casino is 메리트 a 페이 백 먹튀 reputable online gaming software provider that offers the best welcome 유로 스타 사이트 bonus,

    ReplyDelete
  2. Merkur 15c Safety Razor - Barber Pole - Deccasino
    Merkur https://vannienailor4166blog.blogspot.com/ 15C Safety Razor https://deccasino.com/review/merit-casino/ - Merkur - 15C for Barber Pole is casino-roll.com the perfect 출장안마 introduction to the Merkur https://jancasino.com/review/merit-casino/ Safety Razor.

    ReplyDelete

 
Back To Top