TRENDING

Friday, January 29, 2016

இலங்கை சுதந்திர தினத்தில் இரண்டு மொழிகளிலும் தேசிய கீதம்! வரலாற்றில் ஒரு திருப்புமுனை

இவ்வருடம் சுதந்திர தின நிகழ்வுகளில் இரண்டு மொழிகளிலும் தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இவ்வார அமைச்சரவைக் கூட்டத்தின் போது அதற்கான அனுமதி கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வாராந்த அமைச்சரவைக் கூட்ட முடிவுகளைத் தெரிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
சுதந்திர தினத்தின் போது தமிழில் தேசிய கீதம் இசைப்பதை ஒரு சில அமைச்சர்கள் விரும்பவில்லை. எதிர்ப்புத் தெரிவிக்கவும் செய்தார்கள்.
எனினும் நான் உள்ளிட்ட அமைச்சர்கள் சிலரின் விடாப்பிடியான முயற்சி காரணமாக அதற்கான அனுமதி கிடைத்துள்ளது.
எனவே எதிர்வரும் சுதந்திர தினத்தில் இலங்கை வரலாற்றில் முதன்முதலாக சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் சுதந்திர கீதம் இசைக்கப்படும் என்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

Post a Comment

 
Back To Top