தமிழ் நாட்டில் இருந்து தாயகம் திரும்பும் ஈழத் தமிழர்களிடம் அறவிடப்பட்டு வந்த குற்றப்பணத்தை ரத்துசெய்த இந்திய மத்திய அரசாங்கத்திற்கு ஈழத் தமிழர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான நிகழ்வு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைமையகமான கமலாலயத்தில் நேற்று இடம்பெற்றது.
இந்த சந்திப்பின் போது, பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் மூத்த தலைவர் இல.கணேசன் ஆகியோரைச் சந்தித்த தாயகம் செல்ல விரும்பும் மக்கள் அமைப்பினைச் சேர்ந்தவர்கள் ஈழத் தமிழர்கள் சார்பில் நன்றியினைத் தெரிவித்துள்ளார்கள்.
தமிழ் நாட்டில் இருந்து விருப்பத்தின் பேரில் தாயகம் திரும்பிச் செல்லும் ஈழத் தமிழர்களின் வாழ்வாதரத்தினை மேம்படுத்துதல், பாதுகாப்பு, தொழில்வாய்ப்பு, மீள தமிழ்நாடு வருவதற்கான அனுமதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இதன் போது பா.ஜ.க. தலைவர்களிடம் ஈழ தமிழர்களால் முன்வைக்கப்பட்டது.
இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன், எதிர்வரும் 5ஆம் திகதி வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் இலங்கை விஜயம் செய்யவுள்ளதாகவும், அதற்கு முன்னதாக இந்த கோரி்ககைகள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாகவம் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அத்துடன், தாயகம் திரும்புவோர் விமானப்பயணத்தில் அதிக அளவிலான உடமைகளை கட்டணமின்றிக் கொண்டுசெல்வதற்காண ஏற்பாடு செய்வது வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்
இதேளை, தூத்துக்குடி மற்றும் தலை மன்னாருக்கு இடையில் கப்பல் போக்குவரத்தை மீளவும் ஆரம்பித்து அதன் மூலம் திரும்பிச்செல்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கபடும் என இல.கணேசன் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment