TRENDING

Monday, January 25, 2016

சமுதாயத்தில் உள்ள ஏழைகளுக்கும் உதவுவதே எனது நோக்கம்: முல்லைத்தீவு நேயல் துசிதா !

எமது சமூகத்தில் உள்ள ஏழை மக்களுக்கு உதவுவதே தனது நோக்கம் என கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற உயர்தர பரீட்சையில் சித்தியடைந்து 10வது இடத்தை பெற்ற  ஜெயராசா நேயல் துசிதா தெரிவித்துள்ளார்.

மிகவும் வறுமைக் கோட்டில் வாழ்ந்தாலும், தன்னுடைய விடாமுயற்சியால் சிறந்த பெறுபேற்றை பெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார். முல்லைத்தீவு இரணபாலயத்தில் வசித்து வரும் நேயல் துசிதா புதுகுடியிருப்பு மத்திய மாகாவித்தியாலயத்தில் 2014ம் ஆண்டு உயர்தர பரீட்சையில் தோற்றி   ஏ, 2 பி  பெறுபேற்றைப் பெற்றுள்ளதுடன் மாவட்டத்தில்   10வது இடத்தை பெற்றார்.


கடந்த காலத்தில் ஏற்பட்ட யுத்தத்தினால் இரு சகோதரர்களை  இழந்துள்ளார். இதேவேளை, இவரது மற்றொரு சகோதரன் தற்பொழுது பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுவருகிறார்.

யாழ் பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ பிரிவுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளுடன், இது தொடர்பாக அவர் குறிப்பிடுகையில் பல்கலைக்கழகப் பட்டப்படிப்பினை முடித்த பின்னர், எமது சமுதாயத்தில் ஏழை மக்களுக்கு உதவுவதே எனது நோக்கம் என அவர் தெரிவித்தார்.

குறிப்பு :

இவ்வருடம் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகம் தெரிவான வடக்குக் கிழக்கைச் சேர்ந்த வறிய மாணவர்களுக்கு உதவ விரும்பும் உள்ளங்கள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஊடாக உங்கள் உதவிகளை வழங்க முடியும்.

அவ்வாறு உதவும் உள்ளங்கள் ஊடாக வழங்கப்படும் உதவிகள் அனைத்தும்,  குறிப்பாக 120 வறிய மாணவர்கள் பல்கலைக்கழகம் தெரிவாகி இருந்தால் மொத்த நிதியில் இருந்து சமமாக பங்கீடு செய்யப்பட்டு அனைவருக்கும் வழங்கப்படும் என தெரிவிக்கின்றோம்.

அத்துடன் உங்களால் வழங்கப்படும் உதவிகள் தொடர்பான விபரம் முழுமையாக வெளிப்படுத்தப்படும்.
தொடர்புகளுக்கு

Name : Federation of Young Men’s Hindu Association, Batticaloa district.
Bank : Commercial Bank Batticaloa
Account number : 1105040264.
SWIFT CODE : CCEYLKLX,
Bank Code : 7056-105

0094776034559, 0094652228018


Post a Comment

 
Back To Top