TRENDING

Saturday, January 30, 2016

யுத்தம் தொடர்பான சட்டதிட்டங்களை கடைப்பிடிக்கவில்லை! ஜனாதிபதி குற்றச்சாட்டு

யுத்தத்தின் போது கடைப்பிடிக்கப்பட வேண்டிய சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக விடுதலைப் புலிகள் ஒருபோதும் செயற்படவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அல்​ஜஸீரா தொலைக்காட்சிக்கு இன்று வழங்கியுள்ள விசேட செவ்வியிலே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை இராணுவம் சர்வதேச சட்டங்கள் மற்றும் இலங்கையின் சட்டங்களுக்கு அமைவாகவே செயற்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன் போது தெரிவித்துள்ளார்.


எவ்வாறாயினும், இலங்கை இராணுவம் இந்த நியமங்களை மதித்து அனைத்து சந்தர்ப்பங்களிலும் நேர்மையாக செயற்பட்டுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், இராணுவத்தினரைச் சேர்ந்த எவரேனும் ஒருவர் இந்த நடவடிக்கைகளை மீறி தவறிழைக்கப்பட்டிருந்தால், அது தொடர்பில் விசாரணைப் பொறிமுறைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, தவறிழைத்தமை கண்டறியப்படுமாயின், அதனுடன் தொடர்புடையவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தாம் இதற்கு முன்னரும் தெளிவாக கூறியிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.


Post a Comment

 
Back To Top