ஆஸ்திரேலியாவுக்கு செல்வதற்காக ஆபத்தான படகு பயணங்களை மேற்கொண்ட அகதிகளில் ஆயிரத்து 200 பேர் உயிரிழந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளதாகவும் இவர்களில் பெரும்பாலானோர் இலங்கை தமிழ் அகதிகள் என தென்னிந்தியாவுக்கான அவுஸ்திரேலிய துணை தூதுவர் ஷீன் கெலி தெரிவித்துள்ளார்.
இந்த மரணங்கள் 2008ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் நடந்திருக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் குடியேற வீசா இன்றி படகுகள் மூலம் வரும் எவருக்கும் அங்கு குடியேறும் சாத்தியமில்லை.
படகுகள் மூலம் நீண்ட ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு வரும் மக்கள் ஆஸ்திரேலிய கடலில் இருந்து பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்படுவார்கள் அல்லது பிராந்தியத்தில் உள்ள வேறு நாடு ஒன்றுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். இவர்களை அவுஸ்திரேலியாவில் மீள்குடியேற்றுவது மாற்று வழியாக இருக்காது.
2008ம் மற்றும் 2013ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் கடல் வழியாக அவுஸ்திரேலியாவை அடைய முயற்சித்த ஆயிரத்து 200 பேர் உயிரிழந்துள்ளனர்.
2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் மேற்கொள்ளப்படும் எல்லை இறையாண்மை நடவடிக்கை கீழ் உயிரிழப்புச் சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை எனவும் ஷீன் கெலி குறிப்பிட்டுள்ளார்.
நியூசிலாந்துக்கு செல்ல முயற்சித்த சில இலங்கை தமிழ் அகதிகளை தமிழக கியூ பிரிவு பொலிஸார் அண்மையில் கைது செய்திருந்தனர்.
தமிழக பொலிஸாரின் இந்த நடவடிக்கையை பாரட்டியுள்ள அவுஸ்திரேலிய துணை தூதுவர், உண்மையில் இந்த அகதிகள் அவுஸ்திரேலியா நோக்கியே பயணத்தை மேற்கொள்ள முயற்சித்திருக்கலாம் என நம்புவதாக கூறியுள்ளார்.
தமிழகத்தின் கடற்கரையில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கான தூரம் 3 ஆயிரம் கடல் மைல்களாகும். நியூசிலாந்து இதனைவிட தொலைவில் அமைந்துள்ளது.
ஆட்கடத்தல் என்பது ஒரு துஷ்டத்தனமான மற்றும் குற்றவியல் நடவடிக்கையாகும். இதனை அனைத்து வகையிலும் எதிர்க்க வேண்டும்.
இவ்வாறான கடத்தல்கார்கள் மக்களின் பணத்தை கொள்ளையிட்டு விட்டு, அவர்களை உயிராபத்தில் தள்ளி விடுகின்றனர். இந்த கடத்தல்கார்கள் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றாமல் கைவிட்டு விடுகின்றனர்.
ஆஸ்திரேலிய அரசாங்கம், ஆட்கடத்தல்கார்கள் தமது வியாபாரத்தை செய்ய முடியாது தடுக்க கடும் தீர்மானங்களை எடுத்துள்ளது.
தமது நாட்டுக்கு திரும்புவது அல்லது ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக அணுவது ஆகியவையே ஆஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்து கோரியுள்ள இலங்கையர்கள் இருக்கும் ஒரே வழி எனவும் ஷீன் கெலி மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment